கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். 

மைதானத்தின் எந்த திசையில் நின்றும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர் ஜாண்டி ரோட்ஸ். ஆனாலும் பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார். 

அப்பேர்ப்பட்ட லெஜண்ட் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆல்டைம் சிறந்த ஃபீல்டர் யார் என்று தெரிவித்துள்ளார். 

ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பொம்மி மபாங்வாவுடனான உரையாடலின்போது, டிவில்லியர்ஸிடம், உங்கள் பார்வையில் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் யார் என்று பொம்மி கேட்டார். 

அதற்கு பதிலளித்த ஜாண்டி ரோட்ஸ், ஆல்டைம் சிறந்த ஃபீல்டர் என்றால் அது டிவில்லியர்ஸ் தான். விக்கெட் கீப்பிங் செய்வார். ஃபீல்டிங்கில் ஸ்லிப், மிட் ஆஃப், லாங் ஆன் என  அனைத்து திசைகளிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர். அவர் தான் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்.

எல்லா திசைகளிலும் ஃபீல்டிங் அருமையாக ஃபீல்டிங் செய்த வகையில், நான் பார்த்த முதல் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தான். வலுவான கைகளை கொண்ட அவர், பவுண்டரி லைனில் அபாரமாக ஃபீல்டிங் செய்வார். டைவ் எல்லாம் அருமையாக அடிப்பார்.

அதேபோல சுரேஷ் ரெய்னாவின் ஃபீல்டிங்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் பெஸ்ட் ஃபீல்டர் என்றால் அது டிவில்லியர்ஸ் தான். டிவில்லியர்ஸின் நகர்வுகள் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தின் போக்கை சரியாக கணிக்கக்கூடியவர். அவர் தான் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் என்று ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.