Asianet News TamilAsianet News Tamil

RCB vs PBKS: பவர்ப்ளேயில் ஆர்சிபியில் அல்லு தெறிக்கவிட்ட பேர்ஸ்டோவின் காட்டடி அரைசதம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பவர்ப்ளேயில் சிக்ஸர் மழை பொழிந்த பேர்ஸ்டோ 21 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது காட்டடி பேட்டிங்கால் பவர்ப்ளே 6 ஓவரில் 83 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 

jonny bairstow hits 21 balls fifty against rcb in ipl 2022
Author
Mumbai, First Published May 13, 2022, 8:25 PM IST

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடம், பஞ்சாப் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல்,  தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ரார் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட்கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை பொழிந்த பேர்ஸ்டோ, 21 பந்தில் அரைசதம் அடித்தார். தவான் 21 ரன்னிலும், பானுகா ராஜபக்சா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் பேர்ஸ்டோ அதிரடியை தொடர்ந்தார். ஹேசில்வுட், சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் பேர்ஸ்டோ. அதன்விளைவாக பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் ஆறு ஓவரில் 83 ரன்களை குவித்தது. 9வது ஓவரில் 100 ரன்களை கடந்தது பஞ்சாப் அணி. 28 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து ஆடிவருகிறார் பேர்ஸ்டோ. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios