இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி மழை குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் ஆடவில்லை. முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது ஸ்மித் தான். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தை சமாளிப்பதற்காகவே இங்கிலாந்து அணியில் எடுக்கப்பட்டார் ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர். ஆர்ச்சரால் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றாலும், ஸ்மித்தையே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர் ஸ்மித்தின்  பின் கழுத்து பகுதியில் அடித்ததால், ஸ்மித்துக்கு தலைவலி, கழுத்துவலி இருந்துவருகிறது. எனவே அவர் ஃபிசியோவின் முழு கண்காணிப்பில் இருந்துவருவதால் மூன்றாவது போட்டியில் ஆடவில்லை. 

மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித், வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். அவரது பேட்டிங்கை பயிற்சியின் போது அப்படியே இமிடேட் செய்துள்ளார் ஆர்ச்சர். ஸ்மித்தின் ஸ்டாண்டிங் ஸ்டைல், ஸ்டிரைட் டிரைவ் மற்றும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அவர் மிஸ் செய்வது ஆகியவற்றை அப்படியே செய்தார் ஆர்ச்சர். அந்த வீடியோ இதோ.. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தை வீழ்த்துவதற்கு, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் பயன்படுத்திய வியூகம் எடுபடவில்லை. அந்த பந்துகளை அடிக்காமல் விட்டபோது ஸ்மித் எப்படி ஆடினாரோ, அதை அப்படியே இமிடேட் செய்து, ஸ்மித்தை கண்முன் நிறுத்த்தினார் ஆர்ச்சர்.