இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. சமீப காலத்தில் சரியாக ஆடிராத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், அந்த போட்டியில் இரட்டை சதமடித்து(228) இங்கிலாந்தை அபார வெற்றி பெற செய்தார்.

இந்நிலையில், 2வது டெஸ்ட்டிலும் சிறப்பாக ஆடிவருகிறார். நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். மேத்யூஸ் 110 ரன்கள் அடிக்க, டிக்வெல்லா(92), சண்டிமால்(52), தில்ருமான் பெரேரா(67) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் டோமினிக் சிப்ளி(0), ஜாக் க்ராவ்லி(5) ஆகிய இருவரையும் எம்பல்டானியா வீழ்த்தினார். ஐந்து ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணியை கேப்டன் ரூட்டும் பேர்ஸ்டோவும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர்.

அதிரடியாக ஆடக்கூடிய பேர்ஸ்டோ நிதானமாக ஆட, ஜோ ரூட் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 77 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்திருக்க, 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. பேர்ஸ்டோ 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்.