கெய்லை 36 ரன்களில் பிளங்கெட் வெளியேற்ற, அவரை தொடர்ந்து 11 ரன்களில் ஷாய் ஹோப்பும் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பூரானும் ஹெட்மயரும் இணைந்து நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் 3 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பூரான் - ஹெட்மயர் ஜோடி நம்பிக்கையளித்தது. ஆனால் அந்த ஜோடியை ஜோ ரூட் பிரித்து பிரேக் கொடுத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லெவிஸ் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக தொடங்கிய கெய்ல், முதல் ரன்னையே 10 பந்துகளுக்கு பிறகு தான் எடுத்தார். அவரது கேட்ச்சை மார்க் உட் தவறவிட, அதன்பின்னர் அதிரடியாக ஆடினார். எனினும் அவரை பெரிய இன்னிங்ஸ் ஆட அனுமதிக்கவில்லை இங்கிலாந்து பவுலர்கள். 

கெய்லை 36 ரன்களில் பிளங்கெட் வெளியேற்ற, அவரை தொடர்ந்து 11 ரன்களில் ஷாய் ஹோப்பும் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பூரானும் ஹெட்மயரும் இணைந்து நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் திணறிய நிலையில், ஜோ ரூட்டிடம் பந்தை கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன். 

மோர்கனின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. ரூட் தனது இரண்டாவது ஓவரில் ஹெட்மயரை வீழ்த்தினார். பூரான் - ஹெட்மயர் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்த ஜோ ரூட், தனது அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டரையும் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பூரானுடன் ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஹெட்மயர், பார்ட் டைம் பவுலர் என்றுகூட சொல்ல முடியாத ஜோ ரூட்டிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பூரானும் ரசலும் இணைந்து சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.