ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு மறுநாள் மெல்போர்னில் நடக்கும் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி, பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆடிய நிலையில், இந்த முறை நியூசிலாந்து அணி ஆடிவருகிறது. 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்கள் வார்னரும் ஜோ பர்ன்ஸும் களமிறங்கினர். முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் வார்னர் சிங்கிள் எடுக்க, நான்காவது பந்தை தனது முதல் பந்தாக எதிர்கொண்டார் ஜோ பர்ன்ஸ். அந்த பந்தை மிகச்சிறந்த லைன் அண்ட் லெந்த்தில் அபாரமாகவும் துல்லியமாகவும் வீசினார் டிரெண்ட் போல்ட். அப்படியொரு சிறப்பான பந்தை எதிர்பார்த்திராத பர்ன்ஸ், கிளீன் போல்டாகி வெளியேறினார். ஒரு பேட்ஸ்மேனுக்கு முதல் பந்தையே இவ்வளவு அபாரமானதாக வீசினால், எதிர்கொள்வது சிரமம்தான். அந்த வீடியோ இதோ..

அதன்பின்னர் 41 ரன்களில் வார்னரை வாக்னரும், அரைசதம் அடித்த லபுஷேனை 63 ரன்களில் காலின் டி கிராண்ட் ஹோமும் வீழ்த்தினர். இதையடுத்து ஸ்மித்தும் மேத்யூ வேடும் இணைந்து ஆடிவருகின்றனர். ஸ்மித் அரைசதம் கடந்து ஆடிவருகிறார். ஸ்மித் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.