SA20: பார்ல் ராயல்ஸ் பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்.! வெறும் 81 ரன்களுக்கு ஆல் அவுட்
தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் பார்லில் நடந்துவரும் இன்றைய போட்டியில் பார்ல் ராயல்ஸும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:
ரீஸா ஹென்ரிக்ஸ், ஜே மலான், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), கைல் வெரெய்ன், லெவிஸ் க்ரெகெரி, டோனவன் ஃபெரைரா, ரொமாரியோ ஷெஃபெர்டு, ஜார்ஜ் கார்ட்டான், அல்ஸாரி ஜோசஃப், லிஸாட் வில்லியம்ஸ், ஆரோன் ஃபாஞ்சிஸோ.
இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஸ்பின் அஸ்திரம்..! யார் இந்த டாட் மர்ஃபி..?
பார்ல் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், விஹான் லப்பே, டேவிட் மில்லர் (கேப்டன்), டேன் விலாஸ், இயன் மோர்கன், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், ஃபார்ச்சூன், லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷம்ஸி.
முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஃபார்ச்சூனிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஜே மலான் (2), ரீஸா ஹென்ரிக்ஸ்(4) மற்றும் லெவிஸ் க்ரெகோரி (2) ஆகிய மூவரையும் ஃபார்ச்சூன் வீழ்த்தினார். கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸை 2 ரன்னில் இங்கிடி வீழ்த்தினார். ஃபெரைரா(6), ரொமாரியோ ஷெஃபெர்டு(7) ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 36 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சூப்பர் கிங்ஸ் அணி.
அதன்பின்னர் அல்ஸாரி ஜோசஃப் 13 ரன்கள் அடிக்க, 10ம் வரிசையில் இறங்கிய டெயிலெண்டர் லிஸாட் வில்லியம்ஸ் 17 ரன்களும், கடைசி வீரர் ஆரோன் 10 ரன்களும் அடித்தனர். பார்ல் ராயல்ஸ் பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவரில் வெறும் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பார்ல் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஃபார்ச்சூன் மற்றும் ஜோன்ஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 82 ரன்கள் என்ற எளிய இலக்கை பார்ல் ராயல்ஸ் அணி விரட்டுகிறது.