ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், 18 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட போட்டியில், 18 ஓவரில் 198 ரன்களை குவித்தது. 18 ஓவரில் 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் அணியை 183 ரன்களுக்கு சுருட்டி 15 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடர்க்க வீரர் ஜாக் வெதரால்டு, அதிரடியாக ஆடி 47 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடி மிரட்டிய அவரை ஜெய் ரிச்சர்ட்ஸன் அருமையான த்ரோவால் ரன் அவுட் செய்தார். இல்லையெனில் அவர் சதமடித்து மேலும் அதிகமான ரன்களை குவித்திருப்பார். 

82 ரன்களில் களத்தில் இருந்த வெதரால்டு, ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். டீப்பில் ஃபீல்டிங் செய்த ஜெய் ரிச்சர்ட்ஸன், விரைவில் ஓடிவந்து பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ அடித்தார். அந்த த்ரோவை பவுலிங் ஆக்‌ஷனிலேயே அடித்தார். ஆனாலும் மிக துல்லியமாக ஸ்டம்பை ஒட்டியபடி விக்கெட் கீப்பரின் கைக்கு சென்றது அந்த பந்து. அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர், கையை மெதுவாக அசைத்ததுமே ஸ்டம்பில் பட்டது. வெதரால்டும் ரன் அவுட்டானார். அந்தளவிற்கு துல்லியமாக பவுலிங் ஆக்‌ஷனில் த்ரோவிட்ட வீடியோ இதோ..