தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் மஹேலா ஜெயவர்தனே. 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே. 149 சர்வதேச டெஸ்ட் மற்றும் 448 ஒருநாள் போட்டிகளில் ஆடி 24,400க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் மஹேலா ஜெயவர்தனே.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள மஹேலா ஜெயவர்தனே, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

இந்நிலையில், தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் மஹேலா ஜெயவர்தனே. இதுதொடர்பாக பேசிய ஜெயவர்தனே, என்னை பொறுத்தமட்டில் டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் தான் மிக முக்கியம். அந்தவகையில் பேட்டிங்கும் ஆடக்கூடிய ஸ்பின்னரான ரஷீத் கான் எனது அணியில் இருப்பார். 7-8ம் பேட்டிங் ஆர்டரில் பேட்டிங்கும் ஆடுவார். அவரை வெவ்வேறு வித்தியாசமான சூழல்களில், வெவ்வேறு காம்பினேஷன்களில் பயன்படுத்த முடியும். எனவே அவர் தான் எனது முதல் சாய்ஸ்.

ஓபனிங் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான். ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் எனது தேர்வு என்று ஜெயவர்தனே கூறினார்.

ஜெயவர்தனேவின் கனவு டி20 அணியின் 5 வீரர்கள்:

ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜோஸ் பட்லர், முகமது ரிஸ்வான்.