வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. 

மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இலங்கை அணி. இந்த தொடரின் தொடர் நாயகனாகவும் கடைசி போட்டியின் ஆட்டநாயகனாகவும் மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டார். 

உலக கோப்பையில் சரியாக ஆடாமல் தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி, வங்கதேசத்தை 3 போட்டிகளிலும் வீழ்த்தி தொடரை வென்றது. இந்த வெற்றியை இலங்கை வீரர்கள் கொழும்பு மைதானத்துக்குள் பைக் ஓட்டி கொண்டாடினர். 

மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஷெஹன் ஜெயசூரியா, குசால் மெண்டிஸை பின்னால் உட்காரவைத்து மைதானத்துக்குள் பைக் ஓட்டியபோது ஸ்லிப்பாகி கீழே விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த காவலர்களும் மற்றவர்களும் ஓடிச்சென்று அவர்களை தூக்கினர். ஆனால் அவர்களுக்கு நல்லவேளையாக எந்தவித காயமும் ஏற்படவில்லை. அந்த வீடியோ இதோ...