காந்திநகர் லோக்சபா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சரும் குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவை எம்பியுமான அமித் ஷா நேற்று மாலை லோக்சபா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை சரோடி குருகுல மைதானத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஹர்திக் பாண்டியா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த லீக் தொடரில் மொத்தமாக 1078 அணிகள் மற்றும் 16100 வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். காந்திநகர் மக்களை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. அப்போது பேசிய அவர், வரும் 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் அகமதாபாத்தில் மட்டுமே நடைபெறும். 2047 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்றார்.
உலகக் கோப்பை வின்னிங் கேப்டனா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்ஷியில் மாற்றமா?
இந்த லீக் போட்டியை தொடங்கி வைத்த ஷா, கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு உள்பட அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்கான பலன் அடுத்த 25 ஆண்டுகளில் தெரியும் என்றார். மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றார். இந்தப் போட்டியை ஜெய் ஷா,குஜராத் மாநில முதல்வர் இருவரும் கண்டு ரசித்தனர். காந்திநகர் வடக்கு மற்றும் கட்லோடியா அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருமே அப்பீல் செய்யவில்லை – ரன் அவுட்டை இல்லை என்று அறிவித்த நடுவர்; கிரிக்கெட்டில் நடந்த வேடிக்கை!
