Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் முதல் அரைசதம்..!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக பவுலிங்கில் 50 ரன்களை வழங்கினார் பும்ரா.
 

jasprit bumrah gave 50 runs first time in t20i cricket in third t20 against australia
Author
First Published Sep 26, 2022, 8:06 PM IST

இந்திய அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனில் இடம்பெறும் அனைத்து வீரர்களும் ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பியுள்ளனர்.

காயத்தால் ஆசிய கோப்பையில் ஆடாத ஜஸ்ப்ரித் பும்ரா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆடினார். முதல் போட்டியில் ஆடிராத பும்ரா, 2வது போட்டியில் நன்றாக பந்துவீசினார். ஆனால் 3வது டி20 போட்டியில் விக்கெட் வீழ்த்தாததுடன் 50 ரன்களையும் வாரி வழங்கினார்.

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்புடன் வீசுவதுதான் ஜஸ்ப்ரித் பும்ராவின் பலமே. ஆனால் டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய மூவருமே ரன்களை வாரி வழங்குவது சற்று கவலையாக இருந்தாலும், பும்ராவும் ஹர்ஷல் படேலும் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளனர் என்பதால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 ஓவரில் 50 ரன்களை வாரி வழங்கிய பும்ரா, விக்கெட்டும் வீழ்த்தவில்லை. முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் பும்ரா 50 ரன்களை வழங்கி மோசமான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 47 ரன்கள் வழங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அந்த போட்டியில் பும்ரா 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் விக்கெட்டும் வீழ்த்தவில்லை.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

டி20 உலக கோப்பைக்கு முன்பாக, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆடுகிறது. அந்த தொடரில் பும்ரா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த தொடரில் பும்ரா அவரது ஃப்ளோவிற்கு வந்துவிட்டால் அணிக்கு அது பெரும் நம்பிக்கையளிக்கும்

Follow Us:
Download App:
  • android
  • ios