ஃபிட்டு கண்ணா ஃபிட்டு! சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாரான பும்ரா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பும்ரா முழு உடல் தகுதியுடன் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jasprit Bumrah Confirmed for ICC Champions Trophy 2025 vel

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது உறுதி செய்ப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்பட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அணியில் சேர்ந்தாலும், குரூப் சுற்றில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கிடையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு வெளியாகும். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்படும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பில்லை. 

பாகிஸ்தான் நடத்தும் போட்டியில் இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் முதல் போட்டி அடுத்த நாள் நடைபெறும். முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி 23 ஆம் தேதி நடைபெறும். மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான குரூப் சுற்றின் கடைசிப் போட்டியும் நடைபெறும். இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே இன்னும் அணியை அறிவிக்க வேண்டியுள்ளது. பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் உடற்தகுதி குறித்த கவலைகள் இந்திய அணியின் அறிவிப்பை தாமதப்படுத்தின. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. 

சஞ்சு சாம்சனை சேர்ப்பது குறித்து தெளிவு இல்லை. விஜய் ஹசாரே டிராபியில் அசத்தலான ஃபார்மில் இருக்கும் கருண் நாயரை சீனியர் தேர்வுக்குழு தேர்வு செய்யுமா என்பதும் ஆர்வத்தை தூண்டுகிறது. ஏழு இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்களுடன் 752 ரன்கள் குவித்துள்ளார் கருண். விஜய் ஹசாரே டிராபியில் சாதனை படைத்த பிறகு, மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவது என்ற தனது கனவு மிகவும் உயிர்ப்புடன் இருப்பதாக கருண் கூறியிருந்தார். 

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்தியாவின் சாத்தியமான லெவன்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios