Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup முக்கியமான கட்டத்தில் தொடரிலிந்து விலகிய இங்கிலாந்து வீரர்..! மாற்று வீரர் அறிவிப்பு

அரையிறுதி போட்டிக்கு முன்பாக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 

jason roy ruled out of t20 world cup due to injury and james vince added to squad
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 8, 2021, 7:13 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்ட இங்கிலாந்து, அதற்கேற்ப அருமையாக விளையாடி  அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. ஆனாலும் நெட் ரன்ரேட் நன்றாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - நீங்க சொல்றது ஒண்ணும் செய்றது ஒண்ணுமா-வுல இருக்கு..! இந்திய அணி தேர்வை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்

அபுதாபியில் வரும் 10ம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. இந்நிலையில், அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜேசன் ராய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரால் நடக்கவே முடியாமல் தான் களத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அரையிறுதி போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஆடமுடியாமல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

அவருக்கு மாற்று வீரராக மற்றொரு அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேசன் ராய் இந்த உலக கோப்பை தொடரில் ஜோஸ் பட்லருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்கு அதிரடியான தொடக்கங்களை அமைத்து கொடுத்துவந்தார். இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னையாக இருக்கும் நிலையில், டாப் ஆர்டர் பேட்டிங்கைத்தான் அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. இந்நிலையில், ஜேசன் ராய் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் அடி.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

ஜேசன் ராய் இந்த தொடரில் ஆடிய 5 போட்டிகளில், 61 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர் உட்பட மொத்தம் 123 ரன்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி
 

Follow Us:
Download App:
  • android
  • ios