இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

லீட்ஸில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெறும் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. 

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து 358 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி. 359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராயும் பர்ன்ஸும் இந்த இன்னிங்ஸிலும் சோபிக்கவில்லை. 

பர்ன்ஸ் 7 ரன்களிலும் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ரூட்டும் டென்லியும் இணைந்து 126 ரன்கள் சேர்த்தனர். டென்லி 50 ரன்களில் ஆட்டமிழக்க, ரூட்டும் ஸ்டோக்ஸும் களத்தில் இருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது.

ஆஷஸ் தொடரில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் அசத்திவருகின்றனர். ஆர்ச்சர், ஹேசில்வுட், கம்மின்ஸ் என இரு அணிகளிலும் சேர்த்து இந்த பவுலர்கள் தான் மிரட்டுகின்றனர். ஆஷஸ் தொடரில் இவர்களால் தான் அனல் பறக்கிறது. 

நடந்துவரும் மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராயை பாட் கம்மின்ஸ் வீழ்த்திய பந்து அபாரமானது. ராயால் கணிக்க முடியாத அளவிற்கு அவரை திக்குமுக்காடவைத்தது அந்த பந்து. அந்த பந்தில் கிளீன் போல்டானார் ராய். கம்மின்ஸ் வீசிய அந்த அருமையான பந்தின் வீடியோ இதோ...