பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி, 20 ஓவரில் 229 ரன்களை குவித்து 230 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் - பால் ஸ்டர்லிங் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார். பால் ஸ்டர்லிங் அதிரடியாக ஆடி 28 பந்தில் 58 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷதாப் கான் 9 பந்தில் 9 ரன் அடிக்க, காலின் முன்ரோ - அசாம் கான் ஜோடி அதிரடியாக ஆடினர்.

இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். 39 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். 35 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 229 ரன்கள் அடித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.

230 ரன்கள் என்ற கடின இலக்கை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விரட்டிவருகிறது.