Asianet News TamilAsianet News Tamil

ரூல்ஸை பிரேக் பண்ண இஷான் கிஷான் - சூப்பர்மேன் காஸ்டியூமில் வந்து அசத்திய வீடியோ வைரல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இஷான் கிஷான் சூப்பர்மேன் காஸ்டியூமில் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ishan Kishan Spotted with Superman Costume Gone Viral at Mumbai Airport rsk
Author
First Published Apr 2, 2024, 4:12 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 14ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் டிரெண்ட் போல்ட் மற்றும் நந்த்ரே பர்கர் வேகத்திற்கு மளமளவென சரிந்தது. கடைசியில் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

பின்னர், எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சாம்சன் 12, ஜோஸ் பட்லர் 13 ரன்கள் என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தான் இஷான் கிஷான் சூப்பர்மேன் அவுட்பிட்டில் மும்பை விமான நிலையம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் பயிற்சி, டிராவல், போட்டி என்று ஒவ்வொன்றிற்கும் தனி ஜெர்சி உடையை தயார் செய்து கொடுத்துள்ளது. ஆனால், அதை அணிந்து கொள்ளாமல் மும்பை இந்தியன்ஸ் லோகோ கொண்ட சூப்பர்மேன் உடையை அணிந்து கொண்டு பேருந்திலிருந்து இறங்கி விமான நிலையம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் 7 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios