ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் அணி 2008ல் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

அதன்பின்னர் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஷேன் வார்னே விலகிய பிறகு, ராகுல் டிராவிட், ரஹானே, ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் என அந்த காலக்கட்டத்திலிருந்து தற்போதைய காலம் வரையிலான சிறந்த வீரர்கள் பலரை அணியில் பெற்றிருந்தும் அந்த அணி, 2008க்கு பிறகு ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. 

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அந்த ஏலத்தில் ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனாத்கத், இந்தியாவின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்து வீரர் டாம் கரன், தென்னாப்பிரிக்காவின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டை, வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் ஒஷேன் தாமஸ் உட்பட மொத்தம் 11 வீரர்களை ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

இந்நிலையில், அந்த அணியின் ஸ்பின் பவுலிங் ஆலோசகராக நியூசிலாந்தின் இளம் வீரர் இஷ் சோதி நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதான இஷ் சோதி, 2008-09 ஆகிய இரண்டு சீசனில் ராஜஸ்தான் அணியில் ஆடியிருக்கிறார். அதன்பின்னர் அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். ஆனால் இம்முறை வீரராக அல்ல; பயிற்சியாளராக இணைந்துள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், மாஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பராக், ஷேஷான்க் சிங், வருண் ஆரோன், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் டெவாட்டியா, அன்கித் ராஜ்பூட், மயன்க் மார்கண்டே, ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனாத்கத், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், டாம் கரன், ஆண்ட்ரூ டை, ஒஷேன் தாமஸ், கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத், அனிருதா அசோக் ஜோஷி, ஆகாஷ் சிங்.