Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ரிஷப் பண்ட்டுக்கு இடம் இல்லை

டி20 உலக கோப்பைக்கு இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யவில்லை.
 

irfan pathan picks ideal playing eleven of team india for t20 world cup
Author
Chennai, First Published Jun 20, 2022, 2:37 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்  நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருவதைப் போலவே, இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி20 உலக கோப்பை நெருங்கும் வேளையில், சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அதேவேளையில் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார்.

எனவே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக்கே முன்னுரிமை பெறுவார் என தெரிகிறது. அதைத்தான் இர்ஃபான் பதானும் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் இர்ஃபான் பதான்.

அதன்படி, கேப்டன் ரோஹித் - ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான், 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரையும், விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷராக தினேஷ்கார்த்திக்கையும் தேர்வு செய்துள்ளார்.

ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் இர்ஃபான் பதான்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும்லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios