2020ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய 11 வீரர்கள் கொண்ட அணியை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் கேஎல் ராகுல் மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மாவை பதான் தேர்வு செய்யவில்லை. 3ம் வரிசையில் கோலியையும், 4ம் வரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாமையும் ஐந்தாம் வரிசையில் கேன் வில்லியம்சனையும் தேர்வு செய்துள்ள பதான், வில்லியம்சனை கேப்டனாக நியமித்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக லுங்கி இங்கிடி, பும்ரா மற்றும் நியூசிலாந்தின் ஃபெர்குசன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக சாஹலை எடுக்க விரும்புவதாகவும், ஆனால் அவரை விட கடந்த ஆண்டில் ஆடம் ஸாம்பாவின் ஆட்டம் நன்றாக இருந்திருப்பதால், ஸாம்பாவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்த 2020ன் பெஸ்ட் டி20 லெவன்:

கேஎல் ராகுல், ஜோஸ் பட்லர், விராட் கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பொல்லார்டு, லுங்கி இங்கிடி, ஆடம் ஸாம்பா, பும்ரா, லாக்கி ஃபெர்குசன்.