Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: வாழ்வா சாவா போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் ஆஸி., அணியில் ஒரு மாற்றம்.! டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ireland win toss opt to field against australia in t20 world cup
Author
First Published Oct 31, 2022, 1:31 PM IST

டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நாளைய போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது.

டி20 உலக கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதே பெரும் சவாலாகியுள்ளது. 

T20 World Cup: இந்தியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா! ஆஸி.,-இங்கி., இடையே கடும் போட்டி

க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள அணிகள் ஆடும் போட்டிகள் பெரும்பாலும் மெல்பர்னில் திட்டமிடப்பட்ட நிலையில் மெல்பர்னில் மழை காரணமாக சில போட்டிகள் பாதிக்கப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட போட்டியும் மழையால் ரத்தாகி இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

க்ரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து அணி தான் வலுவான நிலையில் உள்ளது. ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியில் மழையால் பெற்ற ஒரு புள்ளி என மொத்தம் 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2, 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. நியூசிலாந்து அணி க்ரூப் 1லிருந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்குமே உள்ளது.

இங்கிலாந்து அணி கடைசி 2 போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இலங்கையை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி கடைசி 2 போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயித்தால் தான் அரையிறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியாவிற்கு உள்ளது.

அந்தவகையில், புள்ளிகளுடன் நல்ல நெட் ரன்ரேட்டையும் பெற ஏதுவாக பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அயர்லாந்தை இன்று எதிர்கொண்டு ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. பிரிஸ்பேனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அஷ்டான் அகருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs SA: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை மட்டமான ஃபீல்டிங்கால் தோற்ற இந்தியா

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ  வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), லார்கன் டக்கர், ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், காரெத் டிலானி, மார்க் அடைர், பாரி மெக்கார்தி, ஃபியான் ஹேண்ட், ஜோஷுவா லிட்டில்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios