IPL Auction:2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் கன்ஃபார்ம் – 3, 4 வீரர்களை தக்க வைக்கலாம் – அருண் துமால்!

வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைமை நிர்வாகி அருண் துமால் தெரிவித்துள்ளார்.

IPL Chairman Arun Dhumal has confirmed that the IPL Mega Auction will be held ahead of the IPL 2025 rsk

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 12 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். வரும் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

சிஎஸ்கே அணியிலிருந்து தொடக்க வீரர் டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும், அணியில் ரச்சின் ரவீந்திரா, மிட்செல் மார்ஷ், சமீர் ரிஸ்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆதலால், சிஎஸ்கே அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த நிலையில் தான் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட இருப்பதாக ஐபிஎல் நிர்வாக அதிகாரி அருண் துமால் கூறியுள்ளார். இதில் ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். இது, சிஎஸ்கே அணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீசனில் நடைபெறும் போட்டிகளை வைத்து வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்து சிஎஸ்கே அணியானது வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios