தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாகம் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பு – தேர்தல் தேதிக்காக பிசிசிஐ வெயிட்டிங்!
பொதுத் தேர்தல் தேதி மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல் காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பார்ட் துபாயில் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை குறித்து விவரங்கள் வெளியிடப்படும். மேலும், இந்தியாவிலேயே போட்டிகளை நடத்தலாமா அல்லது வெளிநாட்டில் நடத்தலாமா என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என்று சோல்லப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெள்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கும் ஐபிஎல் தொடைரின் 21 ஆவது போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு நடக்கும் போட்டிகள் அனைத்தும் துபாய், அபுதாபி மற்றும் சார்ஜாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.