09:10 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: வெற்றிகரமாக முடிந்த ஐபிஎல் 2024 ஏலம்…!

விறுவிறுப்பாகவும், அதிர்ச்சி கொடுக்கும் வகையிலும் துபாய் கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 72 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

09:05 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live:ரூ.20 லட்சத்திற்கு சாகிப் உசேனை வாங்கிய கேகேஆர்!

கடைசி வீரராக சாகிப் உசேன் ரூ.20 லட்சத்திற்கு கேகேஆர் அணியில் வாங்கப்பட்டார்.

08:46 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஏலம் போகாத ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

08:44 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: கடைசி வரை விலை போகாத மணீஷ் பாண்டே – ரூ.50 லட்சத்திற்கு எடுத்த கேகேஆர்!

விலை போகாமல் இருந்த மணீஷ் பாண்டேவை ரூ.50 லட்சத்திற்கு வாங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

08:21 PM (IST) Dec 19

IPL 2024 Auction: கடைசி வீரராக ரூ.20 லட்சத்திற்கு ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்ட ஜாதவேத் சுப்பிரமணியன்

ஐபிஎல் ஏலத்தில் கடைசி வீரராக ஹாங்காங்கில் பிறந்த இந்திய வீரர்ஜாதவேத் சுப்ரமணியன் ரூ.20 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

08:10 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live:ஜே ரிச்சர்ட்சனை ரூ.5 கோடிக்கு வாங்கிய டெல்லி!

ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ரூ.5 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

08:03 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: முஷ்தாபிஜூர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

08:01 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஆஸி, வீரர் ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு வாங்கிய டைட்டன்ஸ்!

ஸ்பென்சர் ஜான்சனை ஏலம் எடுக்க போட்டி போட்ட டெல்லி மற்றும் குஜராத். அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயித்த நிலையில் ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்த டைட்டன்ஸ்.

07:31 PM (IST) Dec 19

IPL Auction Live: டேவிட் வில்லியை ரூ.2 கோடிக்கு வாங்கிய லக்னோ!

டேவிட் வில்லி ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

07:30 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஆஷ்டன் டர்னரை ரூ.1 கோடிக்கு வாங்கிய லக்னோ!

ஆஷ்டன் டர்னர் ரூ.1 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

07:28 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு-ஐ ரூ.1.5 கோடிக்கு வாங்கிய கேகேஆர்

கேகேஆர் அணியில் ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு..

06:30 PM (IST) Dec 19

கார்த்திக் தியாகியை ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய டைட்டன்ஸ்!

கார்த்திக் தியாகி குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.60 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். 

06:27 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: செட் நம்பர் 10ஐ ரசிகர் ஒருவர் எடுத்துக் கொடுத்தார்

அன்கேப்டு ஸ்பின்னர்களுக்கான 10ஆவது செட்டை ரசிகர் ஒருவர் எடுத்துக் கொடுத்தார்.

06:18 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live:ஒரே ஓவரில் கை விரித்த குஜராத் – காப்பாற்றி கொடுத்த ஆர்சிபி ரூ.5 கோடிக்கு ஏலம் போன யாஷ் தயால்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.5 கோடிக்கு யாஷ் தயாலை ஏலம் எடுத்தது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணி சார்பில் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சிஎஸ்கே பவுண்டரி அடித்து சாம்பியனானது.

06:13 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: குமார் குஷாக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்த டெல்லி

விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ராவை ஏலம் எடுக்க போட்டி போடும் டெல்லி, டைட்டன்ஸ். கடைசியாக டெல்லி அணியில் ரூ.7.20 கோடிக்கு வாங்கப்பட்டார்.

06:00 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: 8ஆவது செட் முடிவில் ஏலம் போகாத வீரர்கள் யார் யார்?

ரோஹன் குன்னும்மாள், சவுரவ் சவுகான், பிரியன்ஸ் ஆர்யா, மனன் வோஹ்ரா, முகமது அர்ஷத் கான், சர்பராஸ் கான், ராஜ் அங்கத் பாவா, விவ்ராந்த் சர்மா, அதித் ஷெத், ஹிருத்திக் ஷோக்கீன் ஆகியோர் ஏலம் எடுக்கப்படவில்லை. அடிப்படை விலை ரூ.20 லட்சம் என்று நிர்ணயித்திருந்தும் ஏலம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

05:50 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: கைவிரித்த பஞ்சாப் – தமிழக வீரரை காப்பாற்றிய குஜராத் டைட்டன்ஸ்!

2021 ஆம் ஆண்டு 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியில் நுழைந்த ஷாருக்கானை ரூ.9 கோடி வரையில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்திருந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் பெரிதாக சோபிக்க நிலையில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

05:44 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: ரூ.7.40 கோடிக்கு ஷாருக் கானை ஏலம் வாங்கிய டைட்டன்ஸ்!

கடுமையான போட்டிகளுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் ஷாருக் கான் ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

05:39 PM (IST) Dec 19

IPL 2024 Auction Live: தமிழக வீரர் ஷாருக் கானை ஏலம் எடுக்க போட்டி – அடிப்படை விலை ரூ.40 லட்சம்!

தமிழக வீரர் ஷாருக் கானை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

05:36 PM (IST) Dec 19

IPL Auction 2024 Live: லக்னோ அணியில் ரூ.20 லட்சத்திற்க் விலை போன அர்ஷின் குல்கர்னி

அர்ஷின் குல்கர்னியை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.