Asianet News TamilAsianet News Tamil

IPL Media Rights:ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய சோனி! டிஜிட்டல் உரிமை ரூ.20,500 கோடிக்கு விற்பனை

ஐபிஎல் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமத்தை ரூ.23,575 கோடிக்கு சோனி நிறுவனமும், டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு வியாகாம் நிறுவனமும் கைப்பற்றியது.
 

ipl 2023 to 2027 media rights sold out and here is the full details
Author
Chennai, First Published Jun 13, 2022, 3:34 PM IST

ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை 2017லிருந்து ஸ்டார் நிறுவனம் வைத்திருந்தது. அதன் கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஒளிபரப்பு உரிமம் ஏலம் விடப்பட்டது.

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடப்பட்டது. 

1. இந்தியாவிற்கான டிவி ஒளிபரப்பு உரிமை

2. இந்தியாவிற்கான டிஜிட்டல் உரிமை

3. குறிப்பிட்ட 18 போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமை

4. இந்தியா தவிர மற்ற உலக நாடுகளுக்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமை

இந்தியாவில் டிவி ஒளிபரப்பு உரிமைக்கான அடிப்படை தொகை ரூ.49கோடியாகவும், டிஜிட்டல் உரிமை ரூ.33 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

ஏலத்தின் முடிவில் இந்தியாவில் 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமையை ரூ.23,575 கோடிக்கு சோனி நிறுவனம் கைப்பற்றியது.

டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் ரூ.20,500 கோடிக்கு கைப்பற்றியது. 

மொத்தம் 410 போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை இந்த நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம், ஒரு போட்டிக்கு டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் சேர்த்து மொத்தம் ரூ.107.5 கோடி என்ற பெருந்தொகைக்கு ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios