ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் உள்ளதால் இந்த சீசன் கடும் போட்டியாக இருக்கும். 

ஐபிஎல் 13வது சீசனுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஐபிஎல் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடக்கிறது. முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே தான். முதல் போட்டியிலேயே நான்கு முறை டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் 3 முறை டைட்டிலை வென்ற சிஎஸ்கே அணிகளுக்கு இடையே என்பதால், ரசிகர்கள் உற்சாகத்திலும் பெரும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 

மார்ச் 29ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. மே 17ம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடுகிறது. கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. 

ஐபிஎல் 13வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இதோ...