உலக கோப்பை 2019 தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் பாகிஸ்தானும் இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் அணியோ தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் நன்றாக இருந்த நிலையில், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஒருநாள் தொடரில் பவுலிங் மோசமாக இருந்ததால், உலக கோப்பை அணியில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. 

ஜுனைத் கானுக்கு பதிலாக வஹாப் ரியாஸும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதிலாக முகமது அமீரும் எடுக்கப்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான், பயிற்சி போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடமும் தோற்றது. 

உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் நிலை பரிதாபமானது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவருமான இன்சமாம் உல் ஹக், ஆல்டைம் சிறந்த உலக கோப்பை பாகிஸ்தான் அணியை தேர்வு செய்துள்ளார். 

இன்சமாம் தேர்வு செய்த ஆல்டைம் சிறந்த உலக கோப்பை பாகிஸ்தான் அணி:

ஷர்ஜீல் கான், சயீத் அன்வர், மஜீத் கான், ஜாகீர் அப்பாஸ், ஜாவேத் மியாந்தத், முகமது யூசுஃப், காம்ரான் அக்மல்(விக்கெட் கீப்பர்), இம்ரான் கான்(கேப்டன்), அப்துல் காதீர், சாக்லைன் முஷ்டாக், ஷாகித் அஃப்ரிடி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர். 

யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், ஷோயப் மாலிக் போன்ற சிறந்த வீரர்களை இன்சமாம் உல் ஹக் தனது ஆல்டைம் சிறந்த உலக கோப்பை அணியில் எடுக்கவில்லை.