Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலி vs பாபர் அசாம் ஒப்பீடு..! இன்சமாம் உல் ஹக் அதிரடி

விராட் கோலி - பாபர் அசாம் இடையேயான ஒப்பீடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

inzamam ul haq gives his verdict on virat kohli vs babar azam comparison
Author
Pakistan, First Published Jul 4, 2020, 3:33 PM IST

விராட் கோலி - பாபர் அசாம் இடையேயான ஒப்பீடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் பல பெரிய பெரிய ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் விராட் கோலி. 

inzamam ul haq gives his verdict on virat kohli vs babar azam comparison

விராட் கோலியை போலவே திறமையின் அடிப்படையில் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேன் தான். எதிர்காலத்தில் விராட் கோலியை போலவே பாபர் அசாமும் எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக ஒரு ரவுண்டுவருவார் என பல முன்னாள் ஜாம்பவான்கள் நம்புகின்றனர். பாபர் அசாமை புகழ்ந்தும் வருகின்றனர். 

பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவரை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் கோலி அளவிற்கு நிறைய போட்டிகளில் இன்னும் ஆடவில்லை. ஆனால் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் மற்றும் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

அதேபோலவே பாபர் அசாமும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். திறமையான பேட்ஸ்மேன்கள் பலர், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. எனவே பாபர் அசாம் இப்போது ஆடுவதை போலவே, இன்னும் 6 ஆண்டுகளுக்கு இடைவிடாது சிறப்பாக ஆடினால் தான் அவரை கோலியுடன் ஒப்பிட முடியும். 

inzamam ul haq gives his verdict on virat kohli vs babar azam comparison

ஆனால் பலர் அதற்குள்ளாக பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது மட்டுமல்லாமல், விராட் கோலியைவிட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற அளவிற்கு சில முன்னாள் வீரர்கள் உணர்ச்சிபொங்க கருத்து கூறி வருகின்றனர்.

அதற்குள்ளாகவே விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது அபத்தம் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் தெரிவித்திருந்தார். விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முதாசர் நாசரும் தெரிவித்திருந்தார். 

inzamam ul haq gives his verdict on virat kohli vs babar azam comparison

பாபர் அசாம் 74 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3359 ரன்களையும் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1826 ரன்களையும் குவித்துள்ளார். இந்நிலையில், கோலி  - பாபர் அசாம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், பாபர் அசாம் அசாம் அவரது கெரியரின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடாமல் திணறினார். ஆனால் அவரது திறமையின் வைத்திருந்த நம்பிக்கையால் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது. அவரது திறமையில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இன்று மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம்.

பாபர் அசாம் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார். கோலி நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டார். ஆனால் பாபர் அசாமின் இப்போதைய புள்ளிவிவரங்களை பார்த்தால், அதே ஸ்டேஜில் கோலியைவிட சிறப்பாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருக்கிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios