Asianet News TamilAsianet News Tamil

கேப்டனான சுப்மன் கில் – ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Indias squad for 5 Match T20I Series against Zimbabwe announced now and Shubman Gill become captain rsk
Author
First Published Jun 24, 2024, 7:27 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணியானது வரும் ஜூலை மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, அபிஷேக் சர்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 5ல் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் அடைந்ததோடு 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. அப்படியிருக்கும் போது ஏன் எப்படி அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தெரியவில்லை.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து வெளியேறியது. இதே போன்று தான் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. அதில், 2ஆவது எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – ஜிம்பாப்வே டி20 போட்டிகள்:

06-07-2024 – இந்தியா – ஜிம்பாப்வே – முதல் டி20 – ஹராரே, மாலை 4.30 மணி

07-07-2024 - இந்தியா – ஜிம்பாப்வே – 2ஆவது டி20 – ஹராரே, மாலை 4.30 மணி

10-07-2024 - இந்தியா – ஜிம்பாப்வே – 3ஆவது டி20 – ஹராரே, மாலை 4.30 மணி

13-07-2024 - இந்தியா – ஜிம்பாப்வே – 4ஆவது டி20 – ஹராரே, மாலை 4.30 மணி

14-07-2024 - இந்தியா – ஜிம்பாப்வே – 5ஆவது டி20 – ஹராரே, மாலை 4.30 மணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios