Asianet News TamilAsianet News Tamil

கடந்த பத்தாண்டில் யார் பெஸ்ட் ஃபீல்டர்..?

ஒரு வீரர் 50 ரன்கள் அடிப்பதும், நல்ல ஃபார்மில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மேனை அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்வதும் ஒன்றுதான்.
 

indian team fielding coach sridhar picks jadeja as the best fielder in last decade
Author
India, First Published Oct 30, 2019, 1:10 PM IST

பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங்கும் மிக முக்கியம். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வீரர்களின் ஃபிட்னெஸிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால்தான் ஃபீல்டிங் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

ஜாண்டி ரோட்ஸ் உலகின் தலைசிறந்த ஃபீல்டராக திகழ்ந்தார். பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சைமண்ட்ஸ், பாண்டிங் என ஒவ்வொருவருமே சிறந்த ஃபீல்டராக திகழ்ந்தனர். ஆனால் அப்போதெல்லாம் இந்திய அணியில் ஃபீல்டிங் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் மட்டுமே அசாத்தியமான கேட்ச்களை பிடிக்கக்கூடிய அபாரமான ஃபீல்டர்களாக திகழ்ந்தார்கள்.

indian team fielding coach sridhar picks jadeja as the best fielder in last decade

ஆனால் அதன்பின்னர் தோனி கேப்டனான பிறகு வீரர்களின் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தோனி தலைமையிலான இந்திய அணியில் உருவான தலைசிறந்த ஃபீல்டர்கள்தான் ரெய்னாவும் ஜடேஜாவும். ரெய்னா இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஜடேஜா இந்திய அணியில் ஆடிவருகிறார். 

தோனிக்கு பிறகு கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியிலும் ஃபிட்னெஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்போதைய இந்திய அணியில் அனைவருமே சிறந்த ஃபீல்டர்களாகத்தான் உள்ளனர். ஆனாலும் தற்போதைய அணியில் ஜடேஜா தலைசிறந்த ஃபீல்டர். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகிய இருவருமே அசாத்தியமாக ஃபீல்டிங் செய்யக்கூடிய அபாரமான ஃபீல்டர்கள். 

indian team fielding coach sridhar picks jadeja as the best fielder in last decade

இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எதிரணி பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறும் வேளையில், தங்களது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்து பிரேக் கொடுக்கக்கூடிய ஃபீல்டர்கள். ஃபீல்டிங் புலி ஜாண்டி ரோட்ஸே கூட, ஆல்டைம் பெஸ்ட் 5 ஃபீல்டர்களில் ரெய்னாவை ஒருவராக தேர்வு செய்திருந்தார். ஆனால் தற்போது ஆடக்கூடியவர்களில் ஜடேஜாதான் பெஸ்ட் என தெரிவித்திருந்தார். 

indian team fielding coach sridhar picks jadeja as the best fielder in last decade

இந்நிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங்கை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், கடந்த பத்தாண்டில் ஜடேஜா தான் பெஸ்ட் ஃபீல்டர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்த காலக்கட்டத்தில்தான் ரெய்னாவும் ஆடினார். ரெய்னாவின் பெயரை சொல்லாமல் எளிதாக விட்டுவிட்டார் ஸ்ரீதர். ரெய்னா தற்போதைய இந்திய அணியில் இல்லாவிட்டாலும் கூட, கடந்த 10 ஆண்டில் சிறந்த ஃபீல்டர் என்ற அதில் ரெய்னாவின் பெயரை விட்டுவிடமுடியாது. ஏனெனில் அப்பேர்ப்பட்ட பங்களிப்பை செய்துள்ளார் அவர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios