ஆஸி., சுற்றுப்பயணத்தில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், கடைசி வரை அணியில் வாய்ப்பே பெறாத வீரர் குல்தீப் யாதவ். அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 பிரைம் ஸ்பின்னர்களும் காயத்தால் கடைசி போட்டியில் ஆடாத போது கூட, வாஷிங்டன் சுந்தர் தான் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர, குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், இந்தியாவில் நடக்கும் அந்த தொடர் குல்தீப்பிற்கான நேரம் என்று பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பரத் அருண், குல்தீப் யாதவ் அவரது பவுலிங்கை மேம்படுத்த மிகக்கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார். அவரது பவுலிங் அபாரமாக இருந்திருக்கிறது. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவர் யார், அவரால் என்ன முடியும் என்பதை நிரூபித்து காட்டுவார். அவர் இப்போது அருமையாக வீசிக்கொண்டிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர், குல்தீப்பிற்கான டைம் என்று பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ள நிலையில், முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடகக்வுள்ளன.