ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி மிகத்தீவிரமாக தயாராகிவருகிறது. 

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கடந்த ஆண்டு வெல்ல முடியாமல் இழந்த இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. பவுலிங்கிலும் கூட பேட்டிங் ஆட தெரிந்த பவுலர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

பேட்டிங் ஆர்டர் தெளிவாக உள்ளது. பவுலர்களை பொறுத்தமட்டில் நிறைய ஆப்சன் இருக்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர் பவுலர்கள் கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான அணியில் இருப்பார்கள். நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகிய இருவருக்கும் இடையே எஞ்சிய இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஷர்துல் தாகூரும் இந்த போட்டியில் இருக்கிறார். 

தீபக் சாஹர் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். நவ்தீப் சைனி அசால்ட்டாக 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசுகிறார். நல்ல வேகத்துடனும் வேரியேஷனுடனும் வீசுகிறார் சைனி. நல்ல வேகமாக வீசுவதால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சைனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 

இவ்வாறு மிதமிஞ்சிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருக்கும் நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின்னர் கேப்டன் கோலி இதுகுறித்து பேசினார். இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அந்த அணியை 142 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது. 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஷர்துல் தாகூரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவர்களில் இருவர் பவுலர்கள். 

பின்னர் 143 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, நவ்தீப் சைனி ஒருநாள் அணியிலும் வந்துவிட்டார். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி கூடுதல் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார் சைனி. நல்ல வேகத்துடன் யார்க்கர், பவுன்ஸர் என நல்ல வேரியேஷன் செய்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் சைனி. இது அணிக்கு ரொம்ப நல்ல விஷயம். பும்ரா அணிக்கு திரும்பியது ரொம்ப மகிழ்ச்சி. சீனியர் பவுலர்கள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு உலக கோப்பை ஆடுவதற்கு செல்வதில், ஒரு வீரர் உண்மையாக மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருப்பார் என்று கோலி தெரிவித்தார்.