இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்களை அடித்தது. 274 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 251 ரன்கள் மட்டுமே அடித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. 2 போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது நியூசிலாந்து அணி. 

ஆக்லாந்தில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் டெய்லரும் கப்டிலும் சிறப்பாக ஆடி, அந்த அணியின் ஸ்கோர் 273 ரன்களாக உதவினர். கப்டிலும் நிகோல்ஸும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 93 ரன்களை சேர்த்தனர். 

நிகோல்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 17வது ஓவரை வீசிய சாஹல், அந்த ஓவரின் 5வது பந்தில் நிகோல்ஸை வீழ்த்தினார். அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்க, ஒருவழியாக முதல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்நிலையில், ரிவியூ கேட்பதற்கான 15 நொடிகள் முடிந்ததும் ரிவியூ கேட்டார் நிகோல்ஸ். டி.ஆர்.எஸ் கேட்பதற்கு 15 நொடிகள் தான் காலக்கெடு. பேட்ஸ்மேனோ அல்லது ஃபீல்டிங் அணியோ அதற்குள்ளாக முடிவெடுத்து ரிவியூ கேட்க வேண்டும். 

ஆனால் நிகோல்ஸ், சரியாக அந்த டைம் முடிந்ததும் ரிவியூ கேட்டார். அதை அம்பயரும் ஏற்றுக்கொண்டு, தேர்டு அம்பயர் ரிவியூ செய்ய சிக்னல் கொடுத்தார். ஏற்கனவே, முதல் விக்கெட்டை நீண்டநேரமாக எடுக்க முடியாத கடுப்பில் இருந்த கோலி, நிகோல்ஸ் அவுட்டுக்கு பின்னர் தான் சற்று ரிலாக்ஸ் ஆனார். இந்நிலையில், ரிவியூ கேட்பதற்கான நேரம் முடிந்து நிகோல்ஸ் ரிவியூ கேட்டதும், அதை அம்பயரும் ஏற்றுக்கொண்டதால் செம கடுப்பான கோலி அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அந்த வீடியோ இதோ.. 

via Gfycat