இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் சரியில்லாத 2 போட்டிகளிலும் தோற்றது.

இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரும் அதிரடி தொடக்க வீரருமான கேஎல் ராகுல் சொதப்பலும் ஒரு காரணம். 3 போட்டிகளில் 2ல் டக் அவுட்டான ராகுல், மொத்தமாகவே 3 போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளார். 

ஆனாலும் ராகுல் தான் இந்திய டி20 அணியின் முதன்மை தொடக்க வீரர் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 3வது டி20யின் தோல்விக்கு பின் ராகுல் குறித்து பேசிய கேப்டன் கோலி,  கேஎல் ராகுல் சாம்பியன் பிளேயர். கடந்த 2-3 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். அவர் எங்கள் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக தொடர்கிறார். ரோஹித்துடன் அவர் தான் தொடர்ந்து தொடக்க வீரராக இறங்குவார். அதில் எந்த சிக்கலும் இல்லை. டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 5-6 பந்துகளில் மொத்தமும் மாறிவிடும் என்று கேப்டன் கோலி தெரிவித்தார்.

எவ்வளவு நல்ல வீரராக இருந்தாலும் ஒருசில போட்டிகளில் சொதப்பினால் கூட, அணியிலிருந்து ஓரங்கட்டிவிடுவார் கோலி. ஒரு வீரர் குறித்த உத்தரவாதம் கொடுத்தாலும், அதை பின்பற்றமாட்டார். முதல் டி20 போட்டிக்கு முன், ரோஹித் - ராகுல் தான் தொடக்க வீரர்கள் என்று கூறிவிட்டு, முதலிரண்டு போட்டிகளில் திடீரென ரோஹித் நீக்கப்பட்டார். இந்நிலையில், ராகுல் விஷயத்திலாவது கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம்.