Asianet News TamilAsianet News Tamil

இந்த உலக கோப்பை தொடர் செமயா இருக்கும்.. இங்கிலாந்து செல்வதற்கு முன் கேப்டன் கோலி அதிரடி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 15 வீரர்களை கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. நாளை இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. 
 

indian skipper kohli about world cup 2019
Author
India, First Published May 21, 2019, 5:17 PM IST

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்கும் நிலையில், நாளை இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. 

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள டாப் 2 அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது. முன்னெப்போதையும் விட சிறந்த பவுலிங் யூனிட்டுடன் இந்த உலக கோப்பையில் ஆட உள்ளது இந்திய அணி. டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டும் இந்திய அணியில் வலுவாக உள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 15 வீரர்களை கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. நாளை இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. 

indian skipper kohli about world cup 2019

இந்நிலையில், இன்று கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கோலி, இந்த உலக கோப்பை கண்டிப்பாக கடும் சவாலானதாக இருக்கும். அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் கடும் சவால் நிறைந்த தொடராக இருக்கும். அனைத்து அணிகளுமே சிறப்பாக உள்ளதால் ஒவ்வொரு போட்டியிலும் முழு திறனை காட்டி ஆடுவது அவசியம். ஆஃப்கானிஸ்தான் அணியைக்கூட எளிதாக மதிப்பிடமுடியாது. 2015க்கு பிறகு அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். எனவே ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும் என கேப்டன் கோலி தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios