Asianet News TamilAsianet News Tamil

சிக்ஸ் பேக் உடலுடன் பீச் வாலிபால் விளையாடிய கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா!

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸீல் பீச் வாலிபால் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Indian Players Virat Kohli, Hardik Pandya, Rinku Singh are Played a Beach Volley Ball with a Six Pack Body at Barbados ahead of Super 8 Matches in T20 WC 2024 rsk
Author
First Published Jun 17, 2024, 6:21 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் முன்னேறியுள்ளன. குரூப் சுற்று போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்ற நிலையில், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் சென்றனர். அங்கு, பார்படாஸில் உள்ள பீச்சில் இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடி உள்ளனர். இதில், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில், ரிங்கு சிங் ஃபிட்னஸ் மற்றும் 6 பேக் உடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்று வைரலாகி வருகிறது. மற்றொரு புறம் விராட் கோலியும் சிக்ஸ் பேக் உடலுடன் காணப்படுகிறார். இதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது இதே போன்று பீச் வாலிபால் விளையாடி இருந்தனர்.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி வரும் 20 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. ஆண்டிகுவாவில் நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. கடைசியாக செயிண்ட் லூசியாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றான. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios