Asianet News TamilAsianet News Tamil

ஒரு ஹாட்ரிக் வீழ்த்துறதே கஷ்டம்.. ஆஸி.,யில் 3 முறை ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வம்சாவளி வீரர்

பிக்பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர் அணி வீரரும் இந்திய வம்சாவளி பவுலருமான குரீந்தர் சந்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
 

Indian origin Australia bowler Gurinder Sandhu creates history with BBL hat trick
Author
Queensland, First Published Jan 6, 2022, 7:47 PM IST

பிக்பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி குயின்ஸ்லாந்தில் நடந்தது. இந்த போட்டி 18 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 18 ஓவரில் 133 ரன்கள் அடித்தது. 134 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணி 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரர்கள் அஷ்டான் டர்னர், ஆரோன் ஹார்டி மற்றும் லௌரி ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் சிட்னி தண்டர் வீரர் குரீந்தர் சந்து. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பஞ்சாபை சேர்ந்த குரீந்தர் சந்து ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆடிவரும் நிலையில், இது உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது 3வது ஹாட்ரிக்.

கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவதே கடினமானது. பல மிகச்சிறந்த பவுலர்கள் அவர்களது கெரியரில் ஹாட்ரிக்கே இல்லாமல் முடித்துள்ளனர். அப்படியிருக்கையில், குரீந்தர் சந்து 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் 2018ம் ஆண்டு நடந்த டிஎல்ஜே ஒருநாள் தொடரில் டாஸ்மானியா அணிக்காக ஆடியபோது, விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் மார்ஷ் கப் தொடரில் ஒரு ஹாட்ரிக் வீழ்த்தினார். 

எனவே இந்த பிக்பேஷ் லீக்கில் அவர் வீழ்த்தியது அவரது 3வது ஹாட்ரிக்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios