2014ல் ரூ.425 கோடி, 2024ல் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1090 கோடியாம்…உங்களால் நம்ப முடிகிறதா?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1090 கோடி என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார். உலகின் அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும் ஒருவராக இருக்கிறார். இவரது நிகர சொத்து கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.425 கோடி இருந்தது. ஆனால், இப்போது அதுவே ரூ.1090 கோடி வரையில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கிரிக்கெட்
கார், பைக், வீடு, ஐபிஎல் வருமானம், பிசிசிஐ ஒப்பந்தம், முதலீடு ஆகியவற்றையும் தாண்டி விராட் கோலி இன்ஸ்டாகிராம் போஸ்ட் மற்றும் டுவிட்டர் மூலமாகவும் அதிக வருமானம் ஈட்டுகிறார். பிசிசிஐ ஏ+ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள விராட் கோலி வருடத்திற்கு ரூ.7 கோடி வருமானம் பெறுகிறார். இது தவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.3 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வீதமும் சம்பளம் பெறுகிறார்.
ஐபிஎல்:
ஐபிஎல் தொடர் மூலமாக வருடத்திற்கு ரூ.15 கோடி வீதம் வருமானம் பெறுகிறார். இதுதவிர ஒவ்வொரு போட்டியிலும் பெறும் பரிசுத் தொகை மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார்.
பிராண்ட் ஒப்பந்தம்:
பல முன்னணி நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமாகவும் வருடத்திற்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். இது ஒரு பிராண்ட் ஒப்பந்தத்திற்கு மட்டுமே. இது போன்று பிளிப்கார்ட், டூரோப்ளெக்ஸ், எம்.ஆர்.எஃப், ஊபெர், அமெரிக்கன் டூரிஸ்டர், லிவ்ஸ்பேஸ், டூத்சி, ஓசென், மேக்ஓ, ஸ்டார்ஸ்போர்ட்ஸ், சிந்தால், விவோ, கிரேட் லேர்னிங், வெல்மேன், பூமா, எம்பிஎல் என்று ஏராளமான நிறுவனங்களின் பிராண்ட் ஒப்பந்தம் செய்துள்ளார்.
கார் கலெக்ஷன்:
விராட் கோலியிடம் ஆடி க்யூ7, ஆடி ஆர்8 எல்.எம்.எக்ஸ், ஆடி ஏ8 எல், ஆடி க்யூ8, ஆடி ஆர்.எஸ். 5, ஃப்ளையிங் ஸ்பூர், ரெனால்ட் டஸ்டர், ஆடி எஸ்5, ஆர் ஆர் வோக், டொயோட்டா ஃபர்ச்சூனர் என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார். இந்த கார்களின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.147 கோடி ஆகும்.
அசையா சொத்து – சொகுசு வீடுகள்:
குருகிராம் பங்களா – ரூ.80 கோடி
மும்பை அபார்ட்மெண்ட் – ரூ.34 கோடி
அலிபாக் ஃபார்ம்ஹவுஸ் – ரூ.20 கோடி
அலிபாக் 2000 சதுர அடி வில்லா – ரூ.6 கோடி என்று மொத்தமாக ரூ.140 கோடி மதிப்புள்ள சொகுசு வீடுகள் வைத்திருக்கிறார்.
முதலீடு:
பல நிறுவங்களின் முதலீடும் செய்துள்ளார். இவ்வளவு ஏன், ரெஸ்டாரண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஒன் எஸ், விராங், நுவே, ஸ்டெகதலான், எஃப்சி கோவா என்று பல நிறுவனங்களின் முதலீடு செய்துள்ளார். இதுதவிர எம்பிஎல், ஹைபெர்சைஸ், ரேஜ் கஃபே, டிஜிட், யுஎஸ்பிஎல் ஆகிய நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சோஷியல் மீடியா:
விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 266 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதில், ஒரு பதிவுக்கு மட்டும் விராட் கோலி ரூ.8.9 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். எக்ஸ் பக்கத்தில் விராட் கோலியை 61 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். ஒரே ஒரு எக்ஸ் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈடுகிறார்.
ஒட்டுமொத்தமாக இந்த 2024 ஆம் ஆண்டில் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1090 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றது.
Virat Kohli's net worth - 1,090cr. (Fin HQ). pic.twitter.com/Mkwrmjcjul
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 8, 2024