உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற இந்திய அணி, இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் 2 தொடர் வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சற்றும் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதாலும் டீசண்ட்டான ஸ்கோர் அடித்தாலே அதை டிஃபெண்ட் செய்வதற்கான பவுலிங் யூனிட்டும் இருப்பதால் பேட்டிங்கை தேர்வு செய்தார் கோலி. 

இந்த போட்டியில் இரு அணிகளுமே அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா. 

ஆஸ்திரேலிய அணி: 

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் குல்டர்நைல், பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஸாம்பா.