உலக கோப்பை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. உலக கோப்பைக்கு முந்தைய இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இந்திய அணியில் இன்னும் உறுதி செய்யப்படாத நான்காம் வரிசையில் இறங்கப்போவது யார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்த போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையே, வலைப்பயிற்சியின்போது விஜய் சங்கர் கையில் காயமடைந்ததால் இன்றைய போட்டியில் விஜய் சங்கர் ஆட வாய்ப்பில்லை. எனவே கேஎல் ராகுல்தான் நான்காம் வரிசையில் இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ளது.