இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிகச்சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குவதால் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டபடியே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்).

இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் விலகிய பதும் நிசாங்காவிற்கு பதிலாக குசால் மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லஹிரு குமாராவிற்கு பதிலாக பிரவீன் ஜெயவிக்ரமா ஆடுகிறார்.

இலங்கை அணி:

திமுத் கருணரத்னே (கேப்டன்), லஹிரு திரிமன்னே, குசால் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்கா லக்மல், லசித் எம்பல்டேனியா, விஷ்வா ஃபெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரமா.