Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா ..! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
 

india win toss opt to bat against zimbabwe in t20 world cup
Author
First Published Nov 6, 2022, 1:18 PM IST

டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று மெல்பர்னில் நடக்கும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டு ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!

இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முன்னாள் ஜாம்பவான்களும் வலியுறுத்தியபடி, நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி, ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ஃபைனலில் ஹிமாச்சல் பிரதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்றது மும்பை அணி

ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதவெர், கிரைக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட் நகர்வா, வெலிங்டன் மசகட்ஸா, ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios