இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு  செய்தார்.

மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தொடக்க வீரராக களமிறங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரித்வி ஷா டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

தொடக்க வீரருக்கான இடத்திற்கு கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் இருப்பதால், அந்த இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. அப்படி கடும் போட்டிக்கு நடுவே தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துள்ளார் பிரித்வி ஷா. 

இந்திய அணி: 

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமன் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா.