Asianet News TamilAsianet News Tamil

கடைசி ODI-யிலும் இந்தியா அபார வெற்றி..! நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.
 

india whitewashed new zealand in odi series by 3 0
Author
First Published Jan 24, 2023, 9:30 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.  

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் லெவன்..! ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்.. கேப்டன் யார் தெரியுமா..?

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் 74 பந்தில் பந்தில் சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் கோலி(36), இஷான் கிஷன்(17), சூர்யகுமார் யாதவ்(14) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பாக முடித்து கொடுத்தனர். ஷர்துல் தாகூர் 17 பந்தில் 25 ரன்கள் அடித்தார். மெதுவாக தொடங்கி பின்னர் காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். 38 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் அடித்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, 386 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.

386 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே ரன்னே அடிக்கவிடாமல் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே அடித்து ஆட, அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்ரி நிகோல்ஸ் சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு கான்வே-நிகோல்ஸ் ஜோடி 106 ரன்களை சேர்த்தது. நிகோல்ஸ் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் ஒருமுனையில் நிலைத்து நின்று இந்திய பவுலிங்கை அடித்து ஆடிய டெவான் கான்வே 74 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றூம் 7 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். அவருடன் இணைந்து டேரைல் மிட்செல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருக்க, டேரைல் மிட்செலை 24 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்த ஷர்துல் தாகூர், அதன்பின்னர் டாம் லேதம் (0) மற்றும் க்ளென் ஃபிலிப்ஸ் (5) ஆகிய இருவரையுமே வீழ்த்தினார். அபாரமாக ஆடிய டெவான் கான்வே 138 ரன்களுக்கு உம்ரான் மாலிக்கில் வேகத்தில் வீழ்ந்தார். அதன்பின்னர் பிரேஸ்வெல்(26), சாண்ட்னெர்(34) சிறிய பங்களிப்பு செய்தனர். இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீச, 295 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.

2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் லெவன்..! 2 இந்திய வீரர்களுக்கு இடம்

 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது இந்திய அணி.

Follow Us:
Download App:
  • android
  • ios