வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக குல்தீப் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி தொடரை வென்றது.
இதையடுத்து வரும் 16(நாளை), 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டனில் 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ், நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 அணியிலும் கம்பேக் கொடுக்கிறார்.
வாஷிங்டன் சுந்தரை ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.8.75 கோடிக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஏற்கனவே கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகினர். அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
