உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது. அதேபோலவே நியூசிலாந்து ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதால் இந்த போட்டி எதிர்பார்ப்பு எகிறியது. 

நாட்டிங்காமில் இந்த போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குவதால் 2.30 மணிக்கு டாஸ் போடப்படுவது வழக்கம்.நாட்டிங்காமில் மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. அதனால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் மழை வரக்கூடாது வேண்டிக்கொண்டிருக்கின்றனர். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் அடுத்தடுத்து 2 போட்டிகள் ரத்தாகின. மழையால் போட்டிகள் ரத்து, வீரர்கள் காயம் ஆகியவற்றின் காரணமாக உலக கோப்பை தொடரின் விறுவிறுப்பும் பரபரப்பும் குறைந்துள்ளது.