Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு..! கழட்டிவிடப்பட்ட நடராஜன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

india test squad announced for first 2 tests against england
Author
Mumbai, First Published Jan 19, 2021, 8:59 PM IST

ஆஸி., மண்ணில் அந்த அணியை 2வது முறையாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்தை இந்திய மண்ணில் எதிர்கொள்கிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, அங்கிருந்து இந்தியாவிற்கு வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்திலும் நடக்கவுள்ளது.

சென்னையில் நடக்கவுள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில், ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ரஹானே, புஜாரா, ராகுல், அஷ்வின், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரிதிமான் சஹா ஆகியோருடன் ஆஸி., சுற்றுப்பயணத்தில் அசத்திய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகியோரும் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய ஸ்பின்னர்களும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல்,  வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்.

india test squad announced for first 2 tests against england

ஆஸி., சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தலாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்ற நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios