வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ODI அணிகள் அறிவிப்பு! ODI அணியில் ரஜத் பட்டிதர், திரிபாதிக்கு இடம்
வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகள் அறிவிப்பு! ODI அணியில் ரஜத் பட்டிதர், திரிபாதிக்கு இடம்
டி20 உலக கோப்பையில் ஆடிவரும் இந்திய அணி, அதன்பின் நவம்பர் 18 முதல் 30 வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
அதன்பின்னர் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகியோர் வங்கதேச சுற்றுப்பயணத்தில் ஆடுகின்றனர். வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவிற்கு இடம் கிடைத்துள்ளது. அஜிங்க்யா ரஹானேவிற்கு இடம் இல்லை. அஜிங்க்யா ரஹானேவின் சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது எனலாம்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
இந்திய ஒருநாள் அணியில் ரஜத் பட்டிதர், ராகுல் திரிபாதி, இளம் ஃபாஸ்ட் பவுலர் யஷ் தயால் ஆகிய இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணி இந்த 2 மாற்றங்களை செய்தே தீரணும்..! ஹர்பஜன் சிங் அதிரடி
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதர், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யஷ் தயால்.