Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

india squad announced for t20 world cup
Author
First Published Sep 12, 2022, 5:31 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் டி20 உலக கோப்பையை வெல்ல தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - சிஎஸ்கேவின் வெற்றிதான் எங்களுக்கு உத்வேகம் அளித்தது..! ஆசிய கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் இந்திய அணி தேர்வு குறித்த மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. முன்னாள் வீரர்கள் பலரும் அணிகளை தேர்வு செய்துவந்தனர். இந்நிலையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் தலைமையிலான அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஜடேஜா ஆடவில்லை. அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

காயத்திலிருந்து மீண்ட ஃபாஸ்ட் பவுலர்கள் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷமி மெயின் அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios