ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யாருக்கு ஆடும்லெவனில் இடம்? விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்
ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஓரிரு இடங்கள் மட்டும் இன்னும் உறுதியாகாமல் உள்ளது.
விக்கெட் கீப்பர் மற்றும் ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கான இடம் ஆகிய இரண்டு இடங்களும் இன்னும் உறுதியாகவில்லை. ஓபனிங்கில் கோலி - ராகுல் இருவரில் யார் என்ற விவாதம் நடந்துவந்த நிலையில், ராகுல் தான் முதன்மை ஓபனர் என்பதை கேப்டன் ரோஹித் தெளிவுபடுத்திவிட்டார்.
இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து, இனி வேறு அணி முறியடிக்க முடியாத சாதனையை படைத்த இந்தியா
இந்நிலையில், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யார் என்பது தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. தினேஷ் கார்த்திக் நன்றாக போட்டிகளை முடித்து கொடுப்பதால் அவர் தான் ஆடவேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும், ரிஷப் பண்ட் ஒரு மேட்ச் வின்னர்; அவர் தான் எதிர்காலம் என்பதால் அவரைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும் கருத்து கூறிவருவதால் இதுகுறித்த சந்தேகம் இன்னும் உள்ளது.
இந்நிலையில், ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரை வென்ற பின் இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, டி20 உலக கோப்பைக்கு முன் ரிஷப் - தினேஷ் கார்த்திக் இருவருமே போதுமான போட்டிகளில் ஆடவேண்டும் என்பதே எனது எண்ணம். தினேஷ் கார்த்திக்கிற்கு சற்று கூடுதல் ஆட்டநேரம் தேவை. அவர் ஆஸி., தொடரில் கடைசி 2 போட்டிகளில் மொத்தமாகவே 3 பந்துகள் மட்டுமே ஆடியிருக்கிறார். இந்த ஆஸி., தொடரில் ஆடிய பேட்டிங் ஆர்டரையே பின்பற்றவேண்டும் என்பதுதான் என் எண்ணம் என்றார் ரோஹித். அதன்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்புதான் அதிகம்.
இதையும் படிங்க - PAK vs ENG: பரபரப்பான 4வது டி20யில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி..! 19வது ஓவரில் ஆட்டத்தை திருப்பிய ஹாரிஸ் ராஃப்
அதேவேளையில், இடது கை பேட்ஸ்மேன் தேவையா அல்லது வலது கை பேட்ஸ்மேன் தேவையா என்பதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார் ரோஹித்.